sathyamherbals@gmail.com+91 9843163851
முகத்திற்கு மென்மையும் குளிர்ச்சியும் தரும். (வெளிபிரயோகம்)
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். மேலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்.
தண்ணீரில் கலந்து முகம் கழுவலாம். முல்தானிமட்டி சேர்த்து குழைத்து முகத்தில் பூசி ¼ மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில்முகம் கழுவினால் முகம் பளிச்சிடும். புத்துணர்ச்சி கூடும். வாசனை தேவைபடும் இடங்களில் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
கற்றாழை செடியை பறித்து நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும் கண்களைத் தவிர பிற பகுதிகளில் திக்காக பேக் போல போடவும். பின்னர் நன்றாக மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் உயிரிழந்த செல்கள் உதிர்ந்து விடும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கிளன்சர் கொண்டோ அல்லது குளிர்ந்த நீரிலோ கழுவி விடலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகவும் மென்மையாக இருக்கும்.
குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
Aquarose, that is our rose water can be used for facial with Multhani Matti powder . It increase beauty give brightness to the skin when applied with Multhani Matti powder
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.