NELLIGAI THAILAM 220 ml நெல்லிக்காய் தைலம் 220 ml

தலை முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய் எண்ணெய் Amla hair oil for super fast hair growth   இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம்,…

Product Type :

Availability : In Stock

Product Model : M0052

Price Of Product :

Rs. 275.00

Add To Cart

Review This Product

தலை முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய் எண்ணெய்

Amla hair oil for super fast hair growth

 

இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகும். மேலும் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது.

எனவே முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களால் தலைமுடியைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதில் ஒன்று தான் நெல்லிக்காய் எண்ணெய். இந்த எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். 

 தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின் அலச வேண்டும். இதனால் முடி பட்டுப் போன்று இருக்கும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்ய பின், சிறிது நெல்லிக்காய் எண்ணெயை முடியின் முனைகளில் தடவ வேண்டும். இதனால் முடி வறட்சியடைந்து மென்மையிழந்து காணப்படுவதைத் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் நரைமுடியைப் போக்கும் திறன் கொண்டது. மேலும் பழங்காலத்தில் இருந்து நரைமுடியைப் போக்க நெல்லிக்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர, முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

பொடுகுத் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்க்ள, நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பொடுகு வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் முடி வெடிப்பைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் முடியின் முனைகளில் தடவி வர, பாதிக்கப்பட்ட முடியின் முனைகள் சரிசெய்யப்பட்டு, முடி வெடிப்பது தடுக்கப்படும்.

7 Benefits of Using Amla for Hair

  1. One of the best things you can do to cure hair loss is to massage your hair with amla oil.
  2. It also contains oodles of essential fatty acids, which strengthen hair follicles, giving your hair strength and luster.
  3. The surplus of vitamin C in avla can help halt pre-mature greying.
  4. Not only is it a great hair conditioner but also an effective treatment for dandruff.
  5. If you want to enhance the natural colour of your hair, all you have to do is mix avla powder with henna powder.
  6. One of the best remedies for a dry, flaky and itchy scalp is amla oil; it has the ability to penetrate the scalp deeply and nourish it from within.
  7. It also stimulates hair growth owing to its high iron and carotene content.

Related Products