Freemot oil (castor oil ) 500 ml சுத்தமான விளக்கெண்ணெய் 500 ml

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம். ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக…

Product Type :

Availability : In Stock

Product Model : M0080

Price Of Product :

Rs. 270.00

Add To Cart

Review This Product

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம்.

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக விளக்கெண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

இரவு படுக்கும்போது மூடிய கண் இமைகளின் மேல், தொப்புள் மற்றும் உள்ளங்காலில் இரண்டு சொட்டு வீதம் விளக்கெண்ணெய் தடவி வர குழந்தைகள் மற்றும் பெரியவர் உடல் சூடு தணிந்து ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை கூர்மை அடையும். உடல் சூடு, கண் எரிச்சல் குறைய "விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சம அளவு கலந்து, இரண்டு சிறிய பூண்டுடன் ஆறு மிளகைச் சேர்த்து சூடு செய்து தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிய நேரம் கழித்து சீயக்காய் அல்லது அரபுத்தூள் தேய்த்துக் குளிக்கவும். (அல்லது) தேங்காய் எண்ணெயுடன் மருதோன்றி இல்லை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, சிறியாநங்கை இலை இவற்றைச் சேர்த்துக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தடவி வரவேண்டும்.

மஞ்சணத்தி இலையில் (நுணா இலை) விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, வீக்கத்தின் மேல் வைத்து, சுத்தமான துணி வைத்து இறுக்கமில்லாமல் கட்டிவர வீக்கம் நீங்கும்.

Related Products