SUGAR SPECIAL 50 gm சுகர் ஸ்பெஷல் 50 gm

சர்க்கரை வியாதி நம்  வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில்…

Product Type :

Availability : In Stock

Product Model : M0013

Price Of Product :

Rs. 50.00

Add To Cart

Review This Product

சர்க்கரை வியாதி

நம்  வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.

நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி Hyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
    2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
    3. களைப்புத் தன்மை (Weakness)
    4. எடை குறைவு (Weight Loss)
    5. பசி அதிகரித்தல் (Increased appetite)
    6. நாவறட்சி (Dry mouth)
    7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.

நீரழிவு உள்ளவர்கள் தொடர்ந்து சுகர்-ஸ்பெஷல் எடுத்துக்கொண்டு சரியன உணவு முறைகளை பின்பற்றினால் எந்த கவலையும் தேவை இல்லை.

உணவு முறைகள்

தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.

சத்யம் ஹெர்பல் ப்ரொடெக்ட்ஸ் –இன் அமுக்கரா (அமுக்கலா) நெல்லிக்காய், வெந்தையம் சேர்க்கபட்ட ஹெல்த் மிக்ஸ் “சுகர் ஸ்பஷல் எஃப் டி” (sugar special FD - Healathmix ) ஐ தொடர்ந்து எடுத்துக்க்கொள்வதன் மூலம் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கலாம்.

Related Products